உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்…

இது போல் தமிழர் அனைவரும் சிந்தித்தால் தமிழ் மொழி வளர்ந்தோங்கும்!

தூய தமிழ் பேணும் பணி!

நண்பர் ஒருவர் கேட்டார்
“தூய தமிழ் சொல்லித் தரமாட்டியளோ?” என்று…
“நமது வழக்கிலுள்ள தமிழில் இருந்து
பிற மொழிகளைக் களைந்து விட்டால்
நமது புழக்கத்தில்
தூய தமிழ் இருக்குமே!” என்று
நானும் பதிலுரைத்தேன்!
வானில் இருந்து இறங்கிய
மழையோடு வந்து வீழ்ந்தவன்
நான் அல்லன்
பெற்றவர்கள் ஈன்ற பின்னர்
தெருவெளி அங்காடியில் விற்ற
நூல்களை வேண்டிப் படித்துப் பொறுக்கிய
அறிவைப் பிறருக்கு வழங்குவதே
என் பணி!
“பிறமொழிச் சொல் அகராதி” என்ற
நூலைப் படித்துப் பொறுக்கியதில் இருந்து;
ஆங்கிலத்தில் “ஸ்கர்ட்” என்பது
தமிழில் அரைப் பாவாடையே…
ஹி(இ)ந்தியில் “ஜோ(சோ)டி” என்பது
தமிழில் ‘இணை’ என்பதையே
பாரசீக மொழியில் “லுங்கி” என்பது
தமிழில் மூட்டுவேட்டியே
உருது மொழியில் “தமாஸ்” என்பது
தமிழில் வேடிக்கையே
அரபி மொழியில் “ஜாமீன்” என்பது
தமிழில் ‘பிணை’ என்பதையே
மராத்தி மொழியில் “பால்கோவா” என்பது
தமிழில் திரட்டுப்பாலையே
தெலுங்கு மொழியில் “ஜட்டி” என்பது
தமிழில் கவ்வுரி(ஆண் உள்ளிடுப்பு ஆடை)யே
அட கடவுளே…
நம்மாளுகள் பேசும் தமிழிலே
எத்தனை பிறமொழிகளப்பா?
உலகெங்கிலும் வாழும் தமிழர்களே
நடப்புத் தமிழில் இருந்து
பிறமொழிகளைத் தூக்கியெறிந்தால்
உலகெங்கிலும் தூய தமிழ் பரவுமே!
நூல் : பிறமொழிச் சொல் அகராதி
ஆசிரியர் : எஸ்.சுந்தர சீனிவாசன்
பதிப்பாசிரியர் : விகரு.இராமநாதன்
முதற்பதிப்பு : அக்டோபர், 2005
வெளியீடு : சிறி இந்து பப்ளிகேஷன்ஸ்
வெளியீட்டாளர் முகவரி :-
இல:40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,
(உஸ்மான் ரோடு), த.பெ.எண்…

View original post 8 more words

Advertisements